கேக் தயாரிக்கும் தொழிற்சாலைக்குள் நுழைந்த கண்ணாடி விரியன் பாம்பு- லாவகமாக பிடித்த பாம்புபிடி வீரர். கோவை விமான நிலையம் பகுதியில் உள்ள பிரபல தனியார் கல்லூரி ஒன்றின் பின்புறம், கேக் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகின்றது. இந்த தொழிற்சாலையிலே வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றார்கள்.
இந்த தொழில்சாலைக்குள் ஒரு பாம்பு புகுந்தது தொழிலாளி ஒருவர் இருக்கையில் அமர்ந்து இருந்த பொழுது, காலுக்கு அடியில் புகுந்து சென்று இருக்கிறது இதனை கண்டு பதற்றம் அடைந்த தொழிலாளி, பாம்பைப் பார்த்து திகைத்து நின்றிருக்கின்றார்.
அப்பொழுது உடனடியாக பாம்பு பிடி வீரரான ஸ்நேக் அமீனுக்கு தகவல் கொடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பாம்பு பிடி வீரர் ஸ்நேக் அமீன், அறைக்குள் வந்த பாம்பு உலகத்திலேயே இரண்டாவது அதிக விஷம் உடைய, கண்ணாடிவிரியன் பாம்பு என்பதனை தெரிந்து கொண்டார்.
அதன் அடிப்படையில், பாம்பு ஒரு பைக்குள் அடைக்க, ஒரு சாக்கு பையை எடுத்துக் கொண்ட ஸ்நேக் அமீன், பிளாஸ்டிக் பாட்டிலை அறுத்து, சாக்குப் பையின் முகப்பில் கட்டி, பாம்பு உள்ளே செல்வது போன்று பையை இலகுவாக வடிவமைத்தார்.
அந்த பாம்பு செல்லும் இடத்தில் சாக்கு வைத்து, மெல்ல மெல்ல பாம்பை உட்செல்ல வைத்து, அந்த சாக்குக்குள் பாம்பு சென்றவுடன் பாதுகாப்பாக சாக்கு பையை கட்டினார். பாம்பு உட்புகுத்தப்பட்ட சாக்கின் முகப்பு பாதுகாப்புடன் கையாண்டனர் அதன் பிறகு வன அதிகாரிகளுக்கு தகவல் தெரியப்பட்டு அவர்கள் உதவியுடன் அடர்ந்த வனப்பகுதியில் பாம்பு விடப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.