கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் பகுதிக்கு அருகே உள்ள அடிமாலி என்ற இடத்தில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது காரில் வந்த இரண்டு நபர்கள் வாகனத்தை நிறுத்த காவலர்கள் முயற்சித்த போது வாகனத்தை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றுள்ளனர்.
காவல்துறையினர் பின் தொடர்ந்து வருவதை பார்த்து அவர்கள் வாகனத்தை விட்டு விட்டு தலைமறைவாகினர். வாகனத்தை பறிமுதல் செய்து சோதனை செய்து பார்க்கும் பொழுது சுமார் 100 கிலோ எடை கொண்ட சந்தன கட்டைகள் கடத்தப்பட்டது தெரிய வந்தது.
இதில் மலப்புரத்தைச் சார்ந்த ரியாஸ் மற்றும் பாலக்காடு சார்ந்த முபஷீர் இருவரும் மூணார் வந்து மறையூரில் இருந்து ஹனீபா என்ற நபரின் மூலமாக அறிமுகமாகி சந்தன கட்டைகளை கடத்த முயற்சி செய்தனர். உடனடியாக காவல்துறையினர் அவர்களை பிடித்த சிறையில் அடைத்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணாறு.