தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்ட மன்ற தொகுதியில் புதூர் ஊராட்சி ஒன்றியம், சுப்புலாபுரம் – காடல்குடி செல்லும் சாலையில் ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.7-கோடி மதிப்பீட்டில் சாலை பணிகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
இந்த நிகழ்வில் உதவி கோட்ட பொறியாளர் ராஜபாண்டி இளநிலை பொறியாளர் சார்லஸ் பிரேம்குமார் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து ஊராட்சி மன்ற தலைவர் சீதாலட்சுமி தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் தொழிலதிபர் சுப்பாரெட்டியார் ஒப்பந்ததாரர் சரவணப்பிரியா மாவட்ட பிரதிநிதி வேலுச்சாமி கிளைச் செயலாளர் முருகன் ஒன்றிய விவசாய அணி துணை அமைப்பாளர் சித்துரெட்டி கிளை பிரதிநிதி சித்தமல்லு விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் புதூர் கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக விளாத்திகுளம் நிருபர்
-பூங்கோதை.