”அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை ஜாதி மத பாகுபாடின்றி நடத்த வேண்டும்” என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை என பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இதில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தனிச்சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியில் விடுவதிலும் மற்றும் மாடுகளைப் பிடிப்பதிலும் ஜாதி மத மோதல்கள் உள்ளது.எனவே அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மதுரை மாவட்ட நிர்வாகமே நடத்த வேண்டும் என மதுரையை சேர்ந்த மோகன் ராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.இந்த மனு இன்று(டிச.,20) நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜல்லிக்கட்டு போட்டியில் ஜாதி, மதத்தை புகுத்துவதை ஒருபோதும் ஏற்றுகொள்ள முடியாது. எனவே இந்த போட்டிகளை மதுரை மாவட்ட நிர்வாகமே நேரடி கட்டுப்பாட்டில்இனி எடுத்து நடத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
– தமிழரசன், மேலூர்.