கோவை மாவட்டம் வால்பாறை வட்டார பகுதியில் உள்ள காமராஜர் நகர் தாவரவியல் பூங்கா அருகில் தடுப்புச் சுவர் இல்லாத காரணத்தால் மண் சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது மேலும் அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
மழைக்காலங்களில் மண் சரிந்து சாலையில் விழுந்துள்ளதால் அந்த வழியாக செல்லும் இரு சக்கரம் மற்றும் மூன்று சக்கர வாகனத்தில் செல்லும் ஓட்டுநர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர் மேலும் மழை ஓய்ந்து வெயில் அடிக்கும் காலங்களில் அவ்வழியே செல்லும் வாகனங்களால் மண்புழுதி ஏற்பட்டு பின்னால் வரும் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமத்தை கொடுத்து வருகிறது.
இது போன்ற காரணங்களால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது எனவே இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே இப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகனம் ஓட்டிகளின் வேண்டுகோளாக உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன் மற்றும் திவ்யகுமார், வால்பாறை.