பணியாளர் வருங்கால வைப்பு நிதியை சரிவரச் செலுத்தாதவர் பட்டியலை தாம்பரம் பிராந்திய அலுவலகம் நாளிதழல்களில் வெளியிட்டுள்ளது. இதில் முக்கியமாக இன்றைய தாம்பரம் மாநகராட்சிகுள் அடங்கிய தாம்பரம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் என அனைத்து நகராட்சி அலுவலகங்களின் பெயரும் இடம் பெற்றுள்ளது.
ஆக நகராட்சிகளாக இருந்தபோது இந்த நகராட்சிகளில் பணிபுரிந்த பணியாளர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்பு நிதி சரிவர செலுத்தப்படவில்லை என்பது உறுதியாகிறது. ஒரு ஊழியரின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும் தொகை அவ்வப்போது செலுத்தப்படாடது ஏன்?
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மக்களாகிய நாம் வீட்டு வரி, குடிநீர் வரி, பாதாளசக்கடை வரி என அனைத்தையும் காலம் தாழ்த்தாமல் சரியான நேரத்திற்கு செலுத்த வேண்டும் என அறிவுறுத்துகிற மாநகராட்சி/நகராட்சி ஏன் அதன் பணியாளர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்பு நிதியை சரிவர செலுத்தாது ஏன்??
இங்கே தாம்பரம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் நகராட்சி செலுத்தவேண்டியதாக குறிப்பிடப்பட்டுள்ள மொத்தத் தொகை 23கோடியே 64லட்சம். அவ்வப்போது செலுத்த வேண்டிய தொகைக்கு வட்டி கட்டி செலுத்த வேண்டிய சூழலில் இந்த தொகை எல்லாம் எந்த நிதியிலிருந்து செலுத்தப்பட உள்ளது??
மக்களின் வரிப்பணத்தை வீண்விரயம் செய்து இது போன்ற செயல்களில் ஈடுபடும் நகராட்சி அதிகாரிகளின் மேல், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல், செயலாளர் மற்றும் நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்?? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-செந்தில் முருகன், சென்னை தெற்கு.