உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிசம்பர் 15ஆம் தேதி சர்வதேச தேயிலை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சர்வதேச தேயிலை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோவை மாவட்டம் வால்பாறை சி ஐ டி யு சங்கத்தின் பொதுச் செயலாளர் பி பரமசிவம் இதுகுறித்து கூறுகையில் இன்று மத்திய மாநில அரசு சர்வதேச தேயிலை தினமாக கொண்டாடுகிறது.
இந்த தினத்தின் நோக்கம் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் படும் கஷ்டங்கள் என்ன அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த என்ன செய்ய வேண்டும் எப்படி அவர்களை பாதுகாக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் சம்பந்தப்பட்ட அரசு மற்றும் தனியார் தோட்ட நிறுவனங்களிடம் முறையான ஆலோசனைகள் நடத்தி இறுதி முடிவை வெளியிட வேண்டும்.
ஆனால் இன்று மத்திய அரசால் பெயரளவுக்கு சர்வதேச தேயிலை தினமாக அனுசரிக்கப்பட்டு அதில் பல லட்சம் ரூபாய் வீண் செலவு செய்யப்படுகிறது மேலும் அதிகாரிகளும் வேலை செய்யாமல் அலட்சியமாக இருந்து விடுகின்றனர்.
குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் கடும் மழையிலும் அட்டைப் பூச்சி கடியிலும் வன விலங்குகளின் அச்சுறுத்தலிலும் தன்னுயிர் துச்சமன எண்ணி வேலை செய்து வாழ்ந்து வருகிறார்கள்.
இவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு அறிவித்த சம்பளம் இன்று பஞ்சபடியுடன் சுமார் 490 ரூபாய்க்கு மேல் கிடைக்க வேண்டும் ஆனால் இது கிடைக்காமல் எஸ்டேட் நிர்வாகமும் இவர்களுடன் ஐந்து தொழிற்சங்கங்களும் ADMK ATP, DMK LPF, CONGRESS INTUC, COMMUNIST AITUC மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் தொழிற்சங்கம் உள்ளிட்டவை ஒப்பந்தப்படி இன்று பஞ்சபடியுடன் 433 ரூபாய் கிடைக்கிறது.
இந்நிலையில் தமிழக முதல்வர் சிங்கோனா அரசு தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு 433 ரூபாய் வழங்கியிருப்பது வேதனை அளிக்கிறது.
அதேசமயம் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை வசதிகள் மருத்துவ வசதி, குழந்தைகள் காப்பகம், தொழிலாளர்கள் படிப்பகம், குடியிருப்பு வசதி, குடிநீர், சுகாதாரம் மற்றும் வீடு இல்லாமல் பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையில் நாள்தோறும் காலை முதல் மாலை வரை தேயிலை செடி முன்பு இலையைப் பறித்துக் கொண்டு வாழ்வாதாரத்துக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் இன்று சர்வதேச தேயிலை தினமாக அனுசரிப்பது மிகவும் வேடிக்கையானது இன்று உலகில் அதிகம் பேர் பருகும் புத்துணர்ச்சி மிகுந்த தேயிலை தூள் ஆகும் இதனை உற்பத்தி பண்ணும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் கேள்விக்குறியாக உள்ளது.
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கண் கொண்டு பார்ப்பார்களா..? இவர்களின் புலம்பல்களை காது கொடுத்து கேட்பார்களா..? இவர்களுடைய உரிமைகளை பெற்றுத் தருவார்களா..? இவர்களுக்கு முழுமையாக மேற்கண்டதெல்லாம் கிடைக்கப் பெறுகின்றதோ அன்றே தேயிலை தினம் என்று தேயிலை தினத்தை முன்னிட்டு அரசுக்கு கேள்வி முன் வைத்ததோடு தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்காக குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்
M.சுரேஷ்குமார்.