செய்திக்குப்பின்…
கோவை மாநகர் சுந்தராபுரம் பகுதியில் இருந்து போத்தனூர் செல்லக்கூடிய சாரதா மில் ரோடு சாலையில் சாரதா வித்யாலயா பள்ளி அருகே சாலையில் பள்ளம் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் தடுமாறி வருவதாக செய்தி வெளியிட்டு இருந்தோம்,
செய்திக்கு முன்…https://nalaiyavaralaru.com/2023/12/சுந்தராபுரம்-சாரதா-மில்/
அந்த பள்ளமான இடத்தில் உடனடியாக கலவை மற்றும் கற்களைக் கொட்டி அப்போதைக்கு சரி செய்தனர் சாலையில் போக்குவரத்து குறைந்தவுடன் இரவோடு இரவாக நிரந்தர தீர்வாக போர்க்கால அடிப்படையில் மிக விரைவாக சரி செய்து கொடுத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும், குறிப்பாக 96வது வார்டு கவுன்சிலர் திரு.குணசேகரன் அவர்களுக்கும் நமது நாளைய வரலாறு புலனாய்வு இதழ் மற்றும் சமூக ஆர்வலர்களும் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
நிரந்தர தீர்வுக்காண உடனடி செயல்பாடு…
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.