கோவை மாநகராட்சி போத்தனூர் வார்டு எண் 85-ல் அம்மன் நகர் விரிவு -3 பகுதியில் பொதுமக்கள் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் சிரமப்படுவதாக கோவை மாநகராட்சி தெற்கு மணடலம் உதவி ஆணையருக்கு கோரிக்கை மனுவை கொடுத்துள்ளனர். அதில்
பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்த நிலையிலும்,தெருவில் அங்கும் இங்கும் குழியும்,மேடாகவும் இருக்கிறது ,தற்போது மழை பெய்து வருவதால் ஆங்காங்கே நீர் நிரம்பி சகதியாகவும் ,பொதுமக்கள் செல்லமுடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
தினமும் குப்பை சேகரிக்கும், துப்புரவு தொழிலாளர்கள் குப்பைகள் சேகரிக்க வருவதில்லை, இரு நாட்கள் வருகிறார்கள், மற்ற நான்கு நாட்கள் வருவதில்லை,இதனால் குப்பை தேங்கி டெங்கு கொசு உற்பத்தி ஆகி நோய் தொற்று ஏற்படுகிறது,இதனை தவிர்க்க தினமும் குப்பை சேகரிக்கும் பணியை மாநகராட்சி ஊழியர்கள் சரிவர செய்ய வேண்டும்.
டெங்கு போன்றவற்றை தடுக்க கொசு ஒழிப்பு மருந்துகள் தெளிக்க வேண்டும். மனிதனின் பெரும் வாழ்வாதாரம் ஆக இருக்கும் குடிநீர் சரியாக எங்கள் வார்ட்டிற்கு கிடைக்கவில்லை,அதனை சீராக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வடிகால் சுத்தம்,மழைநீர் ஆங்காங்கே தேங்கி நிற்றல், கழிவுநீர் அடைப்பு போன்றவற்றை சரி செய்து கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மனுவை ஏற்று சரியாக எங்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை உதவி ஆணையாளர் தெற்கு மண்டலம், அவர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-V. ஹரிகிருஷ்ணன்.
கோவை.