கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அரசு கலைக் கல்லூரியில் உலக (AIDS)எயிட்ஸ் தினம் கொண்டாடப்பட்டது. அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம்( NSS) பிரிவு மாணவர்கள் மற்றும் சட்ட மூணாறு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எய்ட்ஸ் தின வினாடி-வினா மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.
இந்நிகழ்ச்சியை NSS திட்ட அலுவலர் டாக்டர். கே.டி.வந்தனா அவர்கள் தலைமையில் கல்லூரி முதல்வர் டாக்டர். என்.ஏ மனேஷ் துவக்கி வைத்தார் . எய்ட்ஸ் தின வினாடி-வினா போட்டியை ஜூனியர் ஹெல்த் இன் ஸ்பெக்டர் ஆர் ராம்குமார் நடத்தினார். பள்ளி சுகாதார செவிலியர் ஆக்னஸ் ஜோஸ் எயிட்ஸ் விழிப்புணர்வு பற்றி கூறினார். எம்.ரமேஷ், எம்.ஆர்.சௌமியா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணாறு.