கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் வால்பாறை பகுதியைச் சுற்றிலும் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது இதன் காரணமாக கருமலை,அக்கா மலை,வெள்ளை மலை, ஊசிமலை, பச்சமலை போன்ற பகுதிகளுக்கு செல்லக்கூடிய சாலையில் மழை மற்றும் காற்றின் காரணமாக நேற்று இரவு 10 மணி அளவில் சாலையில் மரங்கள் விழுந்து வானங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டு இருந்தது இதனால் வால்பாறை தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இன்று காலை 9 மணி அளவில் தீயணைப்பு துறையினர் வந்து சாலையில் விழுந்திருந்த மரங்களை அகற்றினர் இதன் பின்பே அந்த சாலை வழியாக செல்லக்கூடிய அரசு பேருந்துகள், தனியார் வாகனங்கள், ஆட்டோ மற்றும் பிற வாகனங்கள் செல்ல முடிந்தது.
இதனால் அந்தப் பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு நன்றி தெரிவித்தனர். போக்குவரத்து தடை ஏற்பட்டால் அவசர காலங்களில் பொதுமக்கள் எங்கும் வெளியே செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படும் இதுபோன்று மழைக்காலங்களில் தீயணைப்பு துறையினர் மற்றும் சாலை பணியாளர்கள் எச்சரிக்கையுடன் தயாராக இருக்க வேண்டும் என்றும் மழை காரணமாக ஏதாவது இடர்பாடுகள் ஏற்பட்டால் உடனடியாக செயல்பட்டு அதனை சரி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் வைக்கிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன் மற்றும்
வால்பாறை பகுதி நிருபர்
-திவ்யகுமார்.