தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மற்றும் விளாத்திகுளம் மார்க்கெட் பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கும் வரதராஜபெருமாள் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தலைமையில், நகர செயலாளர் மாரிமுத்து முன்னிலையில் மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் பால்ராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ரவிநாயுடு, மாவட்ட பிரதிநிதி வேல்முருகன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு சுரேஷ், கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு தங்கராஜ், மகளிர் அணி சாந்தி, வார்டு கவுன்சிலர் பிரியா, குமாரத்தாய் உட்பட அதிமுக கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-பூங்கோதை, விளாத்திகுளம்.