சென்னை தமிழ்நாடு உடற்கல்வி இயல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் 27.10.2023 – 01.11.2023 அன்று 64-வது மாநில அளவிலான தடகளப் போட்டியில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு பயிலும் மாணவர் திரு.மனோஜ்குமார் அவர்கள் 19 – வயது பிரிவில் நடைபெற்ற 3000 – மீட்டர் ஓட்டத்தில் மாநில அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கல
பதக்கத்தையும், 17-வயது பிரிவில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவர் திரு. பாண்டி 3000- மீட்டர் ஓட்டத்தில் மாநில அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கல பதக்கத்தையும் பெற்று டிசம்பர் மாதம் பாட்னாவில் நடைபெறவுள்ள போட்டியில் தேர்வாகியுள்ள மாணவர் இன்றைய தினம் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்கள். போட்டியில் வெற்றி பெற்றுள்ள மாணவர்களை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் வாழ்த்தி ஊக்கத்தொகை வழங்கினார்கள்.
இந்த நிகழ்வில் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யாஅய்யன் ராஜ் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் வேலுச்சாமி தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் மாசர்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா அய்யாதுரை உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அணி ஸ்ரீதர் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
விளாத்திகுளம் நிருபர்,
-பூங்கோதை.