கோவை மாவட்டம் வால்பாறை பகுதியானது மிகச்சிறந்த சுற்றுலா தளமாக உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து வால்பாறையை சுற்றிலும் உள்ள சுற்றுலாத் தலங்களை சுற்றிப் பார்த்து விட்டு செல்கிறார்கள். மேலும் வால்பாறை சுற்றிலும் சுமார் 50-க்கும் மேற்பட்ட எஸ்டேட் பகுதிகள் உள்ளன. இந்த எஸ்டேட்டில் வேலை செய்யும் தொழிலாளர்கள் அனைவரும் வால்பாறை டவுன் பகுதிக்கு வந்து தான் அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கிறார்கள். இதனால் வால்பாறை டவுன் பகுதியானது மக்கள் கூட்டத்தினால் நிரம்பி வழிகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வால்பாறை இந்தியன் வங்கி அருகாமையில் உள்ள வாழைத்தோட்டம் புதிய பேருந்து நிலையம் அருகாமையில் உள்ள பகுதியானது மிகவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது.
வால்பாறை டவுன் பகுதியில் தங்கும் விடுதிகள், உணவகங்கள், பேக்கரிகள் மற்றும் பொருட்கள் வாங்க வணிக நிறுவனங்கள் என உள்ளன இவற்றை நாடிவரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அவர்கள் வரும் வாகனங்களை ஒழுங்கற்ற முறையில் நிறுத்திவிட்டு அவர்கள் வந்த வேலையை பார்க்க சென்று விடுகிறார்கள்.
இப்படி உள்ள சூழ்நிலையில் இந்தப் பகுதியில் சாலைகளில் செல்லக்கூடிய வாகனங்கள் மிகுந்த சிரமத்துடனும் தடுமாற்றத்துடனும் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது இதனாலேயே பல சமயங்களில் விபத்து ஏற்படுகிறது எனவே வால்பாறை முக்கிய சாலைகளில் வாகனங்கள் நிறுத்த மிக கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துபவர்களுக்கு மிகக் கடுமையான அபராதம் விதிக்க வேண்டும் மேலும் வாகனங்களை நிறுத்துவதற்கு என்றே வாகன நிறுத்தங்கள் ஆங்காங்கே ஏற்படுத்தப்பட வேண்டும் என்று வால்பாறை பகுதி வியாபாரிகள் பொதுமக்கள் மற்றும் வாடகை வாகன ஓட்டுநர்கள் வேண்டுகோள் விடுகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன் மற்றும்
வால்பாறை பகுதி நிருபர்
-திவ்யகுமார்.