உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம் ஜென்மபூமி அறக்கட்டளை செய்து வருகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மற்றும் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் கலந்துகொள்கின்றனர். இதனையடுத்து, இந்தியா முழுவதும் ரயில் நிலையங்கள், கடற்கரை, பூங்கா, கோவில்கள், மசூதிகள், தேவாலயம், பேருந்து நிலையம் உள்ளிட்ட அதிக மக்கள் கூடும் இடங்களில் உச்சகட்ட பாதுகாப்பு பணியில் மத்திய பாதுகாப்பு படை மற்றும் மாநில காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி, சாத்தான்குளம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் வெடிகுண்டு தடுப்புக் காவல் பிரிவினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பேருந்து நிலையம், விளாத்திகுளம் மீனாட்சி அம்மன் கோவில், எட்டையாபுரம் பேருந்து நிலையம், எட்டையாபுரம் பாரதியார் மணிமண்டபம், சிந்தலக்கரை வெட்காளியம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உதவி ஆய்வாளர் கதிரேசன் தலைமையிலான 7 பேர் கொண்ட வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் சோதனை நடத்தினர். பொது இடங்களில் நிறுத்தப்பட்டுள்ள டூவீலர்கள் உள்ளிட்ட வாகனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக விளாத்திகுளம் நிருபர்,
-பூங்கோதை.