கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் வால்பாறை பகுதியில் உள்ள நகராட்சி சமுதாய கூடத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு முகாம் நடைபெற்று வருகிறது இதில் வால்பாறை பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், எஸ்டேட் பகுதி தோட்ட தொழிலாளர்கள், வியாபாரிகள்,அரசு ஊழியர்கள், வாடகை வாகன ஓட்டுநர்கள் உட்பட அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற்று வருகின்றனர்.
கலைஞரின் நூற்றாண்டு விழா முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்ட முகாமானது இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வால்பாறையை சுற்றிலும் உள்ள எஸ்டேட் பகுதி சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் திரளாக வந்து இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்று வருகின்றனர் வால்பாறையில் நடைபெற்று வரும் இந்த காப்பீட்டு முகாம் மக்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
–சி.ராஜேந்திரன் மற்றும்
வால்பாறை பகுதி நிருபர்
-திவ்யகுமார்.