கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் ஆனைமலை தொடரில் காடர் எனும் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர் இந்த பழங்குடியினர் இன சமூகத்தை சேர்ந்த தம்பதி ராஜலட்சுமி- ஜெயபால் இவர்கள் ஆனைமலை தொடரில் வாழும் பழங்குடியினர் உரிமைக்கான பழங்குடி மக்களை எல்லாம் ஒன்று திரட்டி தொடர்ந்து அறவழியில் போராடி நில உரிமை பெற்று தந்தவர் ராஜலட்சுமி.
தனது கிராமத்தை இந்தியாவில் மிகச்சிறந்த முன்மாதிரி கிராமமாக மாற்றி உள்ளார் அவருடைய செயலுக்கு பக்கபலமாக இருந்து வழிகாட்டியவர் இவரது கணவர் ஜெயபால்.
இவர்களது செயலை பாராட்டும் விதமாக இருவரும் இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் மிக மிக முக்கியஸ்தர்கள்
(VVIP) பிரிவில் கலந்து கொள்ள விமான மூலம் இம்மாதம் 22ஆம் தேதி டெல்லி செல்ல உள்ளனர். இவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிப்ரவரி 2ஆம் தேதி தமிழ்நாடு திரும்புகின்றனர்.
காடர் பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்கள் முக்கியத்துவம் வாய்ந்த இந்தியாவின் 75 வது குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள இருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. இதனால் ஆனைமலை தொடர் பழங்குடி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன். மற்றும்
வால்பாறை பகுதி நிருபர்
-திவ்யகுமார்.