திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசல்கள் குறைக்க நடை பதை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் இன்று மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்.
ஒரு மாதத்திற்கு முன்னே முறையே ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல் சீட்டு நடை பாதை ஓர வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டது அனைத்து நடைபதை ஆக்கிரமிப்பு கடைகளுக்கும் 2 வது முறையாக எச்சரிக்கை சீட்டுகளும் அகற்ற கால அவகாசமும் வழங்கப்பட்டது ஆனாலும் நடைபாதை ஓர வியாபாரிகள் அதை கண்டு கொள்ளவில்லை என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று வரை ஆக்கிரமிப்பு கடைகளை உரிமையாளர் அகற்றவில்லை எனவே அதிரடியாக வண்ணார்பட்டை புகாரி ஓட்டல் அருகே இருந்த கடைகள் மற்றும் மேம்பாலம் கீழே பைபாஸ் ஆரியாஸ் ஓட்டல் பகுதி , போக்குவரத்து பணிமனை பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நாளைய வரலாறு செய்தி களுக்காக
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,
-முனியசாமி.