கோவையில் புகழ்பெற்று விளங்கும் முருகனின் ஏழாம் படை வீடான மருதமலையில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தைப்பூச திருவிழாவில் கலந்து கொள்ள கோவை மட்டுமின்றி கோவையை சுற்றியுள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் மருதமலைக்கு வந்து செல்வார்கள் இதனால் தைப்பூச சமயங்களில் மருதமலையில் மக்கள் வெள்ளம் மிகுந்து காணப்படும். இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வரும் பக்தர்கள் அனைவரும் மலை பாதை வழியாக மேலே செல்ல முயன்றால் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அதனை தவிர்க்கும் பொருட்டு தைப்பூசத் திருவிழாவையொட்டி மருதமலை கோயிலுக்கு மலைப்பாதை வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQஜன. 25, 26 ஆகிய நாட்களில் பைக் மற்றும் 4 சக்கர வாகனங்களிலோ, நடைபயணமாக செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. மருதமலை முருகன் கோயிலில் ஜன. 18 முதல் 28ஆம் தேதி வரை தைப்பூச திருவிழா நடைபெறும். மலைப்படி பாதை மற்றும் கோயில் பேருந்துகள் மூலம் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே மருத மலைக்கு வரும் அனைத்து வாகனங்களும் மருத மலைக்கு முன்னால் உள்ள பகுதிகளில் தடுத்து நிறுத்தப்பட்டு அந்தப் பகுதியிலேயே வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்படலாம் என தெரிகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி. ராஜேந்திரன்.