கோவை மாவட்டம் வால்பாறை பகுதியானது சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் பகுதியாக உள்ளது இங்கு கோவை மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இடங்களிலும் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர் தெரியாத இடங்களுக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளுக்காக ஆங்காங்கே அறிவிப்பு பலகைகள் வைக்கப்படுவது வழக்கம் ஆனால் வால்பாறை செல்லும் வழியில் போதுமான அளவு அறிவிப்பு பலகை இல்லை என்று வாகன ஓட்டிகள் கூறுகின்றனர். வால்பாறை செல்லும் வழியில் அட்டகட்டியில் உள்ள விருந்தினர் ஓய்வு மாளிகை பகுதிகளில் வாகன ஓட்டிகளின் வசதியாக வைக்கப்படும் அறிவிப்பு பலகைகள் பயன்பாடு இல்லாமல் வீணாக கிடக்கிறது. இதுபோன்ற அறிவிப்பு பலகைகள் சாலையில் இருந்தால் தான் நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு இன்னும் எவ்வளவு தூரம் உள்ளது எவ்வளவு நேரத்தில் போய் சேரலாம் என்கின்ற தகவல்களை வாகன ஓட்டிகள் தெரிந்து கொள்ள முடியும். எனவே பயன்பாடு இல்லாமல் கிடக்கும் இந்த அறிவிப்பு பலகைகளை முறையாக வைக்க வேண்டிய இடங்களில் வைத்து வாகன ஓட்டிகளின் குழப்பத்தை போக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன் மற்றும்
வால்பாறை பகுதி நிருபர்
-திவ்யகுமார்.