திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்த நேசபிரபு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு நேசபிரபு அவரது வீட்டில் இருந்து வெளியே வந்த போது மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தாக்குதலுக்கு முன்னதாக தன்னை சிலர் பின் தொடர்வதாகவும் அச்சுறுத்தல் இருப்பதாகவும் காவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் காமநாயக்கன்பாளையம் காவல் துறைக்கும் தகவல் அளித்துள்ளார்.
போனில் பேசிய காமநாயக்கன்பாளையம் காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு நேரில் வந்து புகார் கொடுக்குமாறு அலட்சியமாக கூறியுள்ளதாக தெரிகிறது. உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் இது போன்ற தாக்குதல் நடைபெற்றிருக்காது என்று கூறும் பத்திரிகையாளர்கள் சங்கங்கள், பத்திரிகையாளர்ககள் உடனடியாக தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அலட்சியமாக செயல்பட்ட காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். மேலும் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பத்திரிகையாளர்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக துணை தலைமை நிருபர்,
-M.சுரேஷ்குமார்.