தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் ஸ்ரீ லிங்க சுடலைமாடசாமி, ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோவில் முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழா மற்றும் ஸ்ரீ மகா விநாயகர் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் தேன்சிட்டு மற்றும் பூஞ்சிட்டு என இரு பிரிவாக ஜனவரி 24 காலை 7 மணி அளவில் நடைபெற்றது . இதில் தேன்சிட்டு பிரிவில் 33 வண்டிகளும் பூஞ்சிட்டு வண்டி பிரிவில் 41 வண்டிகளும் கலந்து கொண்டன.
இப் போட்டியில் தூத்துக்குடி திருநெல்வேலி விருதுநகர் மதுரை தேனி ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. மாட்டுவண்டி போட்டிகளை தொழிலதிபர் லட்சுமணன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முருகன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். தொடர்ந்து வெற்றி பெற்ற மாட்டு வண்டியின் உரிமையாளர்களுக்கு பரிசுகளும் வெகுமதியும் வழங்கப்பட்டது.
பூஞ்சிட்டு மாட்டு வண்டிப் பந்தயம்: இதில் மேலமீனாட்சிபுரம் முத்துஈஸ்வரி, சண்முகபுரம் விஜயகுமார் ஆகிய வண்டிகள் முதல் பரிசை தட்டி சென்றனர். முதல் பரிசு ரூ. 15 ஆயிரத்தை பிரித்து வழங்கப்பட்டன முருகன் அவர்கள் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வழங்கினார்.
2-ம் பரிசு பெற்ற மறுகால்குறிச்சி சத்தியவாணி, சீவலப்பேரி முகாம்பிகை ஆகிய வண்டிகளுக்கு ரூ.12 ஆயிரம் வழங்கப்பட்டன செல்வக்குமார் தங்ககுமார் அவர்கள் வழங்கினார்கள்.
3-வது பரிசு பெற்ற சிந்தலக்கட்டை ராஜேஷ், சித்திரக்குழி ஆர்.சி.ஆர் ஆகிய வண்டிக்கு ரூ.8 ஆயிரம் வழங்கப்பட்டன வெங்கடேஷ் அவர்கள் வழங்கினார்.
தேன்சிட்டு மாட்டு வண்டி போட்டியில் 41 வண்டிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியை இரு பிரிவுகளாக போட்டி நடந்தன. போட்டியில் தேனி சேர்ந்த சேதுபதி, கூடலூர் மகாபிரபு ஆகிய வண்டிகள் முதல் பரிட்சை தட்டு சென்றன. பரிசு ரூ.10 ஆயிரம் பிரித்து வழங்கப்பட்டன செந்தில் அவர்கள் வழங்கினார்.
2-ம் பரிசு பெற்ற வடக்கு சிலுக்கன்பட்டி முத்து, தேனி அருண்பாண்டியன் ஆகிய வண்டிகளுக்கு ரூ.8 ஆயிரம் வழங்கப்பட்டன மு.மா செல்வ முருகன் அவர்கள் வழங்கினார்.
3-வது பரிசு பெற்ற தேனி வசந்த், கயத்தார் ஈஸ்வரன் ஆகிய வண்டிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டன பாலமுருகன் பிரபாகரன் அவர்கள் வழங்கினார்கள் .
மேலும் போட்டிகளை புதியம்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர் . மாட்டு வண்டி போட்டிக்கான ஏற்பாடுகளை புதியம்புத்தூர் தேவேந்திரகுல வேளாளர் சமுதாய பொதுமக்கள் செய்திருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்
-முனியசாமி