கோவை மாவட்டம் போத்தனூர் அருகே உள்ள காந்தி நினைவு மண்டபத்தில் மக்களுக்கிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதிய ஆண்டில் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தோடு ஜாதி இனம் மதம் கடந்து அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்வதற்கு மகாத்மா காந்தியடிகள் மற்றும் தேச விடுதலைக்காக பாடுபட்ட தியாகிகளை நினைவு கூர்ந்து மாணவர்கள் இடையே ஒற்றுமை பயணமாக இந்த ஒருமைபயணம் துவங்கி உள்ளது.
இந்த ஒருமை பயணத்தை கோவை மாவட்ட ஆட்சியர் மாணவர்கள் இடையே துவங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சி இந்து, கிறிஸ்து, முஸ்லிம், சமுதாயத்தைச் சார்ந்த போதகர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இவர்கள் கூறுகையில் மாணவர்கள் வரும் காலத்தில் ஜாதி மத இனம் இதனை கடந்து மனிதநேயத்துடன் வாழ வேண்டும் என்று ஒருமித்த கருத்தாக அறிவுரை வழங்கினார்கள் இதில் மூவரும் மரக்கன்றுகளை அங்கே நட்டினர் இதில்ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக தலைமை நிருபர்
-ஈசா.