கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மூணாறு பகுதியில் குண்டளை டாமிலிருந்து செண்டுவாரை வரையிலான சாலை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. கடந்த வருடம் அக்டோபர் மூன்றாம் தேதி மக்கள் தலைமையில் மாபெரும் புரட்சி போராட்டங்கள் நடைபெற்றது போராட்டத்தின் பலனாக இப்பொழுது சாலையின் சீரமைப்பு வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்க்கு முன் சாலை சீரமைத்து 20ஆண்டிற்க்கும் மேல் ஆகும். இந்த சாலை வழியாகத்தான் அரசு மேல்நிலைப்பள்ளி, மருத்துவமனை,கன்னன் தேவன் டீ கம்பெனி போன்றவைகள் அமைந்துள்ளது. குண்டளை அணைக்கட்டு முதல் செண்டுவாரை டாப் வரையிலான சாலை சீரமைக்க போராட்டம் நடந்தது, ஆனால் தற்பொழுது குண்டளை முதல் செண்டுவாரை லோயர் வரையிலான சாலை சீரமைப்பு வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நாளைய வரலாறு செய்திக்காக, நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
-அஜித்,மூணாறு.