கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் அரசு கல்லூரியில் அமைந்துள்ள நான்கு டிபார்ட்மெண்ட் தலைமையில் சமத்துவ பொங்கல் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.பொங்கல் உழவர் திருநாளாக கொண்டாடப்படுகிறது.தனது உழைப்பிற்கு உதவிய கால்நடைகளுக்கும் உறுதுணையாக இருந்த இயற்கைக்கும் நன்றி சொல்லும் விதமாக உழவர்களால் கொண்டப்படும் ஒரு விழாவென பொங்கல் அமைகிறது.
ஆனால் இதன் முக்கிய நோக்கம் அதுவல்ல. தமிழர்கள் இயற்கையை கடவுளாக வழிபட்டனர். மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்திலேயே முதல் தமிழ் கல்லூரி என அறியப்படுவது இந்த மூணாறு கல்லூரி ஆகும்.
தமிழனின் பெருமையையும் பொங்கல் திருநாளையும் பெருமைப்படுத்தும் வகையில் பலவிதமான பேச்சுப் போட்டிகள், கட்டுரை எழுதுவது, கவிதை சொல்வது போன்ற நிகழ்ச்சிகள் 22-01-2024 அன்று நடைபெற்றது அதைத் தொடர்ந்து 23-01-2024 அன்று டிபார்ட்மெண்ட் தலைமையில் பொங்கல் வைக்கும் போட்டி,
ரங்கோலி கோலம் போட்டி, கயிறு இழுக்கும் போட்டி, ஒயிலாட்டம் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றது நிகழ்ச்சியின் கல்லூரி முதல்வர் டாக்டர் மனேஷ் என்.ஏ, துணை முதல்வர் கே.டி வந்தனா,
தமிழ் டிபார்ட்மெண்ட் முதல்வர் அருள் செல்வி, டாக்டர் ஞானேஸ்வரன், யூனியன் அட்வைசர் நிகிலா டி.வி, யூனியன் தலைவர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் தலைமையிலும், மாணவர்கள் தலைமையிலும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகளும் வழங்கப்பட்டது.
நாளை வரலாறு செய்திக்காக, நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
-அஜித்,மூனாறு.