கேரள மாநிலத்தில் இடுக்கி மாவட்டத்தில் கேரளாவையும் தமிழ்நாடு-வை இனைக்கும் மூணாறு மற்றும் போடிமெட்டு சாலையை மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைதுறை அமைச்சர் நிதின்கட்கரி இன்று (ஜன-5)ல் திறந்து வைக்கிறார்.
கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு, போடிமெட்டு இடையே 42 கி.மீ. தூரம் ரோடு இருவழிச் சாலையாக ரூ.381.76 கோடி செலவில் அகலப்படுத்தப்பட்டது. அப்பணிகள் 2017 செப்., துவங்கின. பணிகள் முடிந்து அந்த வழியில் வாகனங்கள் சென்று வருகின்றன. இருப்பினும் அதிகாரபூர்வமாக ரோடு திறக்கப்படவில்லை.
இந்நிலையில் ரோட்டை நிதின்கட்கரி ஜன.5ல் நேரில் வந்து திறந்து வைக்கிறார். கொச்சியில் இருந்து மூணாறுக்கு ஹெலிகாப்டரில் வரும் அமைச்சர் பழைய மூணாறில் விளையாட்டு துறைக்குச் சொந்தமான மைதானத்தில் இறங்குகிறார். மூணாறு நிகழ்ச்சியில் மூணாறு – போடிமெட்டு ரோட்டை திறந்து வைப்பதுடன் இடுக்கி அருகே செருதோணியில் 2018ல் பேரழிவில் சேதமடைந்து சீரமைக்கப்பட்ட பாலத்தையும் ‘ஆன் லைன்’ வாயிலாக திறந்து வைக்கிறார்.
நாளைய வரலாறு செய்திக்காக…நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
-அஜித், மூணாறு.