கோவை மாவட்டம் வால்பாறை கருமலை எஸ்டேட் ஸ்டாப் கிளப்பில் நடைபெற்ற முதல்வரின் மக்கள் முகாம் நிகழ்ச்சியில் C I T U சங்கத்தின் பொதுச் செயலாளர் P.பரமசிவம் தமிழக முதல்வரின் பார்வைக்கு உடனடியாக கொண்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கையோடு கோரிக்கை மனு ஒன்று அழைத்துள்ளார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மனுவில் கோவை மாவட்டம், வால்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்டு வால்பாறை மற்றும் எஸ்டேட் பகுதிகளில் குறைந்த தொழிலாளர்கள் இருப்பதால் எஸ்டேட் நிர்வாகத்தாலும், அரசாலும் தேயிலைத்தோட்டங்கள் நடத்த முடியாமல் இத்தொழில் நலிவடைந்து இப்பகுதியே காணாமல் போய் விடும் சூழ்நிலையில் இன்னும் நான்கு ஐந்து ஆண்டுக்குள் வந்து விடும்.
இதை கருத்தில் கொண்டு தேயிலைத்தொழில் மேலோங்கவும், தாயகம் திரும்பியவர்களுக்காக கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு அரசு தேயிலைத் தோட்டங்களில் அவர்களுக்கு தேவையான வசதிகளும் வேலைகளும் வழங்கி வாழ்வாதாரத்தை பாதுகாக்க முடிந்தது. அதே போல் மாண்புமிகு தமிழக முதல்வர் கடந்த ஓரிரு ஆண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்து இலங்கையில் இருந்து வந்தவர்கள் சுமார் 5000 குடும்பங்கள் இராமேஸ்வரத்தில் அமர்த்தப்பட்டு அவர்களுக்கு பல அதிகாரிகளை நியமித்து பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து பாதுகாக்கிறது. ஆனால் அவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை.
இவர்களின் வேலைவாய்ப்பை பாதுகாக்க தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான சின்கோனா டேன்டீ நலிவடைந்த நிலையில் இவர்களை பணிக்கு அமர்த்தப்பட்டு பழைய நிலைமையுடன் சிறப்பாக செயல்படுத்தலாம். இதை கருத்தில் கொண்டு இராமேஸ்வரத்தில் இருக்கும் தாயகம் திரும்பியர்களை வால்பாறை சின்கோனா பகுதியில் பணி வழங்கி பாதுகாக்க வேண்டுமென்று பொதுநலத்துடன் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழக துணை தலைமை நிருபர்,
-M.சுரேஷ்குமார்.