தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அம்பாள் நகரில் அமைந்துள்ள முத்து பூங்காவிற்கு மீரான் பாளையம் தெருவை சேர்ந்தவர்கள் முருகன் கற்பகம் தம்பதியினர் இவர்களுக்கு அனிதா வயது (16) மனோஜ் குமார் (13) மனோஜ் குமார் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் (1.1.2024) அன்று ஆங்கில வருட பிறப்பின் முதல் நாளான முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறையை என்பதால் மனோஜ் குமார் மாலை 6:00 மணி அளவில் விளாத்திகுளம் மதுரை சாலையில் உள்ள அம்பாள் நகரில் அமைந்துள்ள பேரூராட்சி உட்பட்ட முத்து பூங்காவிற்கு நண்பர்களுடன் விளையாட சென்றுள்ளார், அங்கிருந்த மின்விளக்கு கம்பம் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மனோஜ் குமார் கீழே விழுந்துள்ளார் இதனை அடுத்து உடன் சென்ற நன்பர்கள் எழுப்பியும் எழுந்திருக்கவில்லை என்பதனால் அவர்கள்
பெற்றோர்களுக்கு தொலைபேசி மூலமாக தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த மனோஜ் குமாரின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மனோஜ் குமாரை தூக்கிக்கொண்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு வந்தனர் ஆனால் மனோஜ் குமார் உடலை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர் இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது அதன் பின்
அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக மனோஜ் குமாரின் உடல் வைக்கப்பட்டுள்ளதுஇது தொடர்பாக மனோஜ் குமார் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் மின்சாரம் தாக்கி மனோஜ் குமார் இருந்து இருக்கலாம் என்று விசாரணை நடத்தி வருகின்றன
நாளைய வரலாறு செய்திகளுக்காக விளாத்திகுளம் நிருபர்
பூங்கோதை
.