தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்தில் வைத்து மாநில இணை ஒருங்கிணைப்பாளர் வெளியிட்ட செய்தி:
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்தில் வைத்து மாநில இணை ஒருங்கிணைப்பாளர் வெளியிட்ட செய்தி:
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் கிராம ஊராட்சியில் பணியாற்றி வரும் மேல்நிலை தொட்டி இயக்குபவர்கள், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள் , சமூக தணிக்கை அலுவலர்கள் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்பிரவரி 2 ஆம் தேதி சென்னை பனகல் மாளிகை சைதாப்பேட்டை முன்பு நடைபெறுகிறது.
18 அம்ச கோரிக்கைகள்:
40 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குவார்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், கிராம ஊராட்சிகளில் 250 ரூபாய் மாத ஊதியத்தில் பணியாற்றி வரும் கூடுதல் ஒஎச்டி ஆப்பரேட்டர்களை பணி வரன் முறை செய்து கால முறை ஊதியம் வழங்க வேண்டும், தூய்மை காவலர்களுக்கு மாதாந்திர ஊதியம் ரூ 10,000 வழங்கிட கேட்டல், பென்சன் திட்டத்தில் இணைத்திடக் கேட்டல், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கவுன்சிலிங் முறையில் பணியிட மாறுதல் மற்றும் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்கள் உடனே நிரப்பிக் என 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்பிரவரி 2 ஆம் தேதி போராட்டம் அறிவிப்பு.
இந்த நிகழ்ச்சியில் மாநில துணைத் தலைவர் பழனிச்சாமி, ஒன்றிய தலைவர் இசக்கி முத்து கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்
-முனியசாமி.