கோவையில் செல்போன் செயலி மூலம் கடன் பெற்று தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று ஏமாற்றிய இளைஞரை கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர்.
“கேஸ் பே” என்ற செல்போன் செயலி மூலம் எந்த ஆவணங்களுமின்றி கடன் பெற்று தருவதாக பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் விளம்பரம் கொடுத்து ஏமாற்றியதாக கோவை மாநகர சைபர் கிரைம் போலிசில் பாதிகப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்ட நிலையில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சதீஸ் (34) என்பவரை கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணை, சதீஸ் நாமக்கல் மாவட்டம் செல்லம்பட்டியை சேர்ந்தவர் என்பவதும், எம்.ஏ பொருளாதாரம் படித்து முடித்த பட்டதாரி என்பதும் தனது சமூக வலைதள பக்கத்தில் கேஸ் பே என்ற செல்போன் செயலில் எந்த ஆவணங்களும் இன்றி கடன் பெற்று தருவதாக விளம்பரம் செய்துள்ளார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் இதற்கான செயல்பாட்டு கட்டணத்தை மட்டும் செலுத்த வேண்டும் என 10 ஆயிரம் ரூபாய் வரை பணத்தை ஆன் லைன் மூலம் வாங்கிக்கொண்டு ஏமாற்றியுள்ளார். தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் சதீஸ் ஏமாற்றி இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட சதீஸை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.