கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் தற்பொழுது கோடைகாலம் தொடங்கிவிட்ட நிலையில் வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் தற்பொழுது தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது மேலும் வனப்பகுதியில் தண்ணீர் இன்றி மரங்கள் ,செடி, கொடிகள் காய்ந்து போகும் சூழ்நிலை உருவாகியுள்ளது மேலும் வனத்தில் உள்ள வனவிலங்குகள் தண்ணீர் இன்றி குடியிருப்பு பகுதிகள் மற்றும் தண்ணீர் உள்ள பகுதிகளுக்கு படையெடுக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது தேயிலை தோட்டங்கள் தண்ணீர் இன்றி பசுமை இழந்து காய்ந்து போகும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வால்பாறையை சுற்றிலும் உள்ள எஸ்டேட் தொழிலாளர்கள் குடிநீர் கிடைக்காமல் அவதி அடையும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர் மேலும் வறட்சியால் தேயிலைத் தோட்டங்கள் காய்ந்து போகும் சூழ்நிலை உருவானால் வேலை இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகும்.
எனவே வால்பாறையை சுற்றிலும் உள்ள பசுமைகளை காக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் மேலும் அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை முறைப்படி கடைபிடிக்க வேண்டும் அப்பொழுதுதான் வால்பாறையின் பசுமையை காக்க முடியும் மேலும் வால்பாறை பகுதிகளில் மரம் வெட்டுபவர்கள் முறைப்படி அனுமதி பெற்று தான் வெட்டுகிறார்களா என்பதை அரசு அதிகாரிகள் மிகவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அனுமதியின்றி மரம் வெட்டுபவர்களுக்கு அதிக அபராதம் மற்றும் அதற்குண்டான தண்டனையை பெற்றுத் தர வேண்டும்.
மரங்கள் அதிகமாக இருந்தால்தான் மழைப்பொழிவு உண்டாகும் எனவே பசுமையை காத்து வறட்சியில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் எனவே அரசு அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் கொடுக்கும் அறிவுரைகள் மற்றும் எச்சரிக்கைகளை மதித்து பொதுமக்களாகிய நாமும் இணைந்து செயல்பட்டால் தான் இந்த வறட்சியிலிருந்து ஓரளவாவது நம்மை காப்பாற்றிக் கொள்ள முடியும்.
மரங்களை காப்போம்!
பசுமையை வளர்ப்போம்!!
மழை பெறுவோம்!!!
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்
மற்றும்
வால்பாறை நிருபர்
-திவ்யகுமார்.