கோவில்பட்டி ரோட்டரி சங்கத்தின் சார்பில் 119வது பன்னாட்டு ரோட்டரி தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி நூலாசிரியர் ஜெகஜோதிக்கு ரோட்டரி பசுமை விருது வழங்கப்பட்டது.
கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் ஆசிரியரும்,கோவில்பட்டி பசுமை இயக்கத்தின் தலைவருமான ஜெகஜோதி எழுதிய இயற்கை எனும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நூலுக்கு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 30ஆயிரம் காசோலை வழங்கப்பட்டது.இயற்கை நூலாசிரியர் ஜெகஜோதிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்கத்தின் சார்பில் ரோட்டரி பசுமை விருது வழங்கப்பட்டது.
கோவில்பட்டியில் நடந்த நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் வெங்கடேஷ் தலைமை வகித்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் முத்துசெல்வன், சாலை பாதுகாப்பு பிரிவு தலைவர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ரோட்டரி மாவட்ட தலைவர் விநாயகா ரமேஷ் கலந்துகொண்டு இயற்கை நூலாசிரியர் ஜெகஜோதிக்கு ரோட்டரி பசுமை விருது வழங்கி பாராட்டினார்.
இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் சரவணன், ராஜமாணிக்கம், மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்
-முனியசாமி.