கோவை மாவட்டம் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி கடந்த மாதம் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் நான்கு சவரன் தங்க செயினை பறித்துச் சென்றார்.
இதே போல பொள்ளாச்சி கோலார்பட்டி சுங்கத்தைச் சேர்ந்த அம்சவேணி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் இரண்டு சவரன் தங்கச் செயினை பறித்துச் சென்றார்.
இந்நிலையில் இது குறித்து இரண்டு பெண்களும் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் புகார் தெரிவித்திருந்தனர். இதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தனிப்படையை அமைத்து விசாரணையை தொடங்கினர் செயின் பறிப்பு நடைபெற்ற பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகிய காட்சிகளை ஆய்வு செய்த பொழுது இரண்டு பெண்களிடமும் நகை பறிப்பில் ஈடுபட்டது ஒரே நபர் தான் என்பது தெரிய வந்தது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் விசாரணையில் மாக்கினாம்பட்டி பகுதியில் வசித்து வரும் தலைமை காவலர் சபரிகிரி தான் என்பது உறுதியானது இதனை அடுத்து சபரிகிரியை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்து 7.5 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்து கைது செய்தனர். இந்த வழிப்பறி திருட்டுக்கு அவர் புதிதாக வாங்கிய புல்லட்டை பயன்படுத்தியது தெரியவந்தது.
சபரிகிரி பணியாற்றிய பல இடங்களில் அவர் மீது புகார்கள் உள்ளன. செட்டிப்பாளையத்தில் இருந்து பொள்ளாச்சி சிறப்புப் பிரிவுக்கு அவர் பணியிடம் மாற்றப்பட்டிருந்தார். செட்டிப்பாளையத்தில் இருந்து வருகிற வழியில் கூட அவர் ஒரு செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். பொள்ளாச்சியில் 4 செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். அவற்றில் 2 தோல்வியில் முடிந்தது. ஒரு கவரிங் செயினையும் பறித்துள்ளார்.
இதுகுறித்து சபரியிடம் விசாரணை நடத்தியபோது அவர் ஒப்புக்கொள்ளவில்லை. பிறகு சிசிடிவியில் அவர் ஹெல்மெட்டில் ஒட்டியிருந்த ஸ்டிக்கரை வைத்து சபரி தான் என்பதை உறுதிப்படுத்தினோம். ஒருகட்டத்தில் சபரியும் ஒப்புக்கொண்டார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழக துணை தலைமை நிருபர்,
-M.சுரேஷ்குமார்.