தலைவர் தளபதி விஜய், அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் கோவை தெற்கு மாவட்ட தலைவர் விக்கி உள்ளிட்டோரின் ஆணைக்கிணங்க, கோவை தெற்கு மாவட்ட தலைமை இளைஞரணி தலைவர் பாபு, கோவை தெற்கு மாவட்ட தொண்டர் அணி தலைவர் கிரீஸ் மற்றும் கோவை தெற்கு மாவட்ட மாணவர் அணி தலைவர் பாலாஜி உள்ளிட்டோரின் ஆலோசனைப்படி சிறப்பாக களப்பணியாற்றிக்கொண்டிருக்கும்
வால்பாறை த.வெ.க நகரதலைமை மக்களின் சமூக சேவையின் ஒரு பகுதியாக வால்பாறை நகர தலைவர் ஆண்ட்ரூஸ் தலைமையில் செயலாளர் சையத் அலி முன்னிலையில் நேற்று 25-02-24 ஞாயிற்றுக்கிழமை காலை காந்தி சிலை அருகே பொதுமக்கள் பயன் பெறும் வகையில் வால்பாறை தமிழக வெற்றிக்கழகம் சார்பாக நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நகர நிர்வாகிகள், அனைத்து வார்டுக்குட்பட்ட நிர்வாகிகள், மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தாகம் தனித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-P.பரமுசிவம், வால்பாறை.