தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோவை மாநகர் மாவட்டம் சார்பாக இந்தியாவில் உள்ள வழிபாட்டு தளங்களை பாதுகாக்க வலியுறுத்தி மாபெரும் மக்கள் திரள் ஆர்பாட்டம் (09/02/24) நேற்று வெள்ளிக்கிழமை மாலை 4:30 மணியளவில் கோவை உக்கடம் வள்ளியம்மை பேக்கரி அருகில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் T.A.அப்பாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில்
மாவட்ட செயலாளர் ஹக்கீம், மாவட்ட துணை செயலாளர்கள் ஹஸ்ஸான் மற்றும் சல்மான் ஆகியோர் கோரிக்கை கோஷங்கள் எழுப்பினர்.
சிறப்பு அழைப்பாளராக TNTJ மேலாண்மை குழு தலைவர் சபிர் அலி அவர்கள் ஆர்ப்பாட்ட உரையை தொடங்கி வழிபாட்டு தளம் சட்டம் 1991-படி அனைத்து வழிபாட்டு தளங்கள் பாதுகாக்க வலியுறுத்தி பேசினார்.
இதில் மாவட்ட பொருளாளர் நாசர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முஜீப் ரஹ்மான், காசிம், ஆஷிக் முன்னிலை வகித்தனர். பெருந்திரளாக நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கிளை நிர்வாகிகள், ஆண்கள், பெண்கள் என 2500 மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்!!!
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.