ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஒற்றை யானை சுற்றி திரிகிறது. இது குறித்து வனத்துறையினர் ஏற்கனவே மலைவாழ் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தநிலையில் பொள்ளாச்சி அடுத்த கவியருவி அருகே உள்ள நவமலை சாலையில் நேற்று மாலை ஒற்றை காட்டு யானை உலா வந்தது. மேலும் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தையும் முட்டி சேதப்படுத்தியது. ஒற்றை யானை இரு சக்கர வாகனத்தை முட்டி தள்ளும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒற்றை யானை பொதுமக்கள் பயணிக்கும் சாலைகளில் உலா வருவதால் பொதுமக்கள் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் செல்ல வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.