கோவையில் உள்ள மருதமலை சுப்பிரமணிய திருக்கோவிலுக்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். மலைப்பகுதியில் கோவில் உள்ளதால் வன விலங்குகளான யானை சிறுத்தை , மான், கரடி போன்ற விலங்குகள் படிக்கட்டுகள் வழியாகவும் சாலை வழியாகவும் அடிக்கடி நடமாடுகின்றன. இதன் காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி கோவில் நிர்வாகம் சார்பாக சாலை வழிகள் படிக்கட்டுகள் வழிகள், கோவில் வளாகம் போன்ற பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் வனத்துறை சார்பாக மலைக்கோவிலுக்கு செல்ல கூடிய பக்தர்கள் காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை இரு சக்கர வாகனங்களும் , 6:30 மணி வரை நான்கு சக்கர வாகனங்களும் அனுமதிக்கப் படுகின்றன இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு மலைக்கோவிலுக்கு சென்ற பக்தர் ஒருவரின் காரின் முன்பு முதல் வளைவில் சிறுத்தை ஒன்று ஓடியது. வாகனத்தின் வெளிச்சத்தை கண்ட சிறுத்தை சிறிது தூரம் ஓடி பின்பு வனப்பதுதிக்குள் சென்று மறைந்து விட்டது. இதுபோன்று சமீப காலங்களில் மலைப்பாதை வழித்தடங்களில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது இதனால் மருதமலை கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோவில் நிர்வாகத்தினர் அனுமதித்த காலத்திற்குள் மிகவும் பாதுகாப்பாக வந்து செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறித்தி உள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.