மாநகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம். கோவை மாநகராட்சி வார்டு எண் 99 மஸ்தான் சாஹிப் வீதியில் 30ஆண்டு மேலாக பொதுமக்கள் பயண்படுத்தவிடாமல் சாலையை ஆக்கிறமிக்கப்பட்டு இருந்தது, கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் தேர்தலில் கோவை மாநகராட்சியை திமுக கைபற்றியது, வார்டு 99 மு.அஸ்லம் பாஷா (திமுக) மாமன்ற உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவருடைய முயற்சியால் பல ஆண்டுகளாக மஸ்தான் சாய் வீதியில் சாலை ஆக்கிரமிக்கப்பட்டிருந்த சாலையை மாநகராட்சி அதிகாரிகள் துணையோடு காவல்துறை அதிகாரிகளின் பாதுகாப்போடு இன்று காலையில் புல்டோசர் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு மாநகராட்சி தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது விரைவில் அங்கு பாதாள சாக்கடை மற்றும் சாலை பணிகள் ஆரம்பிக்கப்படும் என்று 99 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் மு.அஸ்லம் பாஷா அவர்கள் கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
புகைப்படங்கள் அசோக்
-சையது காதர் குறிச்சி.