தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வடக்கு சேவல் கிராமம் புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டித்தர வேண்டுமென்று அப்பகுதி பொதுமக்கள்
முனிய சக்தி ராமச்சந்திரன் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர் . கோரிக்கையை ஏற்றுக் கொண்டு விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் முனிய சக்தி ராமச்சந்திரன் ஒன்றிய பொது நிதியிலிருந்து 20 லட்சம் நிதி ஒதுக்கி வடக்கு சேவல் கிராமத்தில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட உத்தரவிட்டதன் பேரில் அதற்கான ஒப்பந்த பணிகள் நடைபெற்று
இன்று புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு யூனியன் சேர்மன் முனிய சக்தி ராமச்சந்திரன் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் மேல சண்முகபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சித்திரைவேல் ஒப்பந்ததாரர்கள் கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக விளாத்திகுளம் நிருபர்,
-பூங்கோதை.