கோவை மாவட்டம் வால்பாறையில் அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சி வால்பாறை அதிமுக நகரச் செயலாளர் அலுவலகத்தில் நகர துணைச் செயலாளர் பொன் கணேஷ் தலைமையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி
புகழஞ்சலி கோஷங்கள் எழுப்பி கொண்டாடப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் வால்பாறை சுப்பிரமணி சுவாமி கோவில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜையும் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி உற்சாகமாக பிறந்தநாள் விழாவை கொண்டாடினார்கள். இந்நிகழ்ச்சியில்
அதிமுக வின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் ஆர் ஆர் பெருமாள் முன்னிலையில் நகர மன்ற உறுப்பினர் மணிகண்டன் ஐ டி பிரிவு செயலாளர் சண்முகம் அதிமுக அரசு போக்குவரத்து கழக செயலாளர் சேகர் வார்டு செயலாளர் மோகன், இளைஞரணி செயலாளர் பாபு மற்றும் சீனி, லோகேஷ், செல்லையா, கண்ணன். மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
-P.பரமசிவம், வால்பாறை.