தமிழக முழுவதும் வருவாய் துறையினர் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பணிகளை புறக்கணித்து இரண்டாம் கட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாச்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்க விளாத்திகுளம் வட்டத் தலைவர் மாரிமுத்து தலைமையில் அனைத்து பணிகளையும் புறக்கணித்து இரண்டாம் கட்டமாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட இணை செயலாளர் பாலமுருகன் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரை ஆற்றினார்.
மேலும் வட்டச் செயலாளர் மலையாண்டி முன்னிலையில் நடைபெற்ற இந்த காத்திருப்பு போராட்டத்தில், துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரியாக அல்லாதோர் பாதுகாப்பு அரசாணையினை உடன் வெளியிட வேண்டும்.
இளநிலை வருவாய் ஆய்வாளர்/முதல் நிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசனையின் அடிப்படையில் பிரித்து எடுத்த ஆணையினை உடன் வெளியிட வேண்டும்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்களின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்கிட வேண்டும்.
இளநிலை உதவியாளர், தட்டச்சர் ஆகியோர்கள் இடையே ஒருங்கிணைந்த முதல் நிலை நிர்ணயம் செய்வதில் ஏற்படுத்தப்பட்டுள்ள குளறுபடிகளை சரி செய்திட மனித வள மேலாண்மை துறை மூலமாக உரிய தெளிவுரை வழங்கிட வேண்டும்
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் 3 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடன் நிரப்பிட வேண்டும்.
அனைத்து வட்டங்களிலும் சான்றிதழ் வழங்கும் பணிகளுக்கென புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்த வேண்டும்.
அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மேலாண்மை பணிக்கானசிறப்பு பணியிடங்கள் மற்றும் பேரிடர் மேலாண்மை பிரிவில் 33.03.20 23.முதல் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை மீண்டும் வழங்கிட வேண்டும்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் உள்ள பயன்பாட்டிற்கு தகுதியற்ற ஈப்புகளை பதிவு செய்தது அவற்றிற்கு ஈடாக புதிய ஈப்புகளை உடனடியாக வழங்கிட வேண்டும்.
2024 பாராளுமன்ற தேர்தல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள முழுமையான நிதி ஒதுக்கீட்டினை உடனே வழங்கிட வேண்டும்.
உங்கள் ஊரில் உங்களை தேடி மக்களுடன் முதல்வர் மற்றும் மக்களின் முகவரி போன்ற அரசின் திட்ட பணியில் அதீத பணியில் அளிக்கப்படுவதை தவிர்த்து திட்ட பணிகளை செம்மையாக மேற்கொள்ள உரிய கால அவகாசம் மற்றும் நிதி ஒதுக்கிடு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும். -உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன், தனி வட்டாட்சியர் பாஸ்கரன், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், மண்டல துணை வட்டாட்சியர்கள் அண்ணதாஸ், சங்கரநாராயணன் மற்றும் அலுவலக பணியாளர்கள் பலர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
விளாத்திகுளம் பகுதி நிருபர்
-பூங்கோதை.