தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே புதூரில் சென்னம்பட்டி கிராமம் பொதுமக்கள் சார்பாக வீரபாண்டிய கட்டபொம்மன் 265வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 2வது ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. சின்ன மாட்டு வண்டி பந்தயத்தை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்எல்ஏ தொடங்கி வைத்தார். சின்ன மாட்டு வண்டி போட்டியில் முதல் பரிசை ரூ. 20265 மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மாட்டு வண்டிக்கு சுசிலா தனஞ்செயன் புதூர் ஒன்றியம் செயலாளர் வழங்கினார் இரண்டாவது பரிசை ரூ 15265 நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மாட்டு வண்டிக்கு சுரேஷ் வழங்கினார் மூன்றாவது பரிசை 10265 சித்திரங்குடி மாட்டு வண்டிக்கு மூர்த்தி வழங்கினார்.
பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியை புதூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் தனஞ்செயன் மற்றும் தனபதி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில், முதலிடத்தை நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மாட்டு வண்டியும் ரூ 15265 2வது பரிசு ரூ 10265 சீவலப்பேரி சேர்ந்த மாட்டு வண்டியும், 3வது பரிசை ரூ 8265 இலந்தைகுளம் மாட்டுவண்டியும் வென்றன. இந்த நிகழ்ச்சியில் புதூர் சமூக வலைதள அணி பொறுப்பாளர் மோகன், ஊர் மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,
-முனியசாமி.