தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் சிவஞானபுரம் கிராமத்தில் 15-வது சுகாதார மானியத் திட்டத்தின் கீழ் ரூ.37.45- லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார மைய கட்டிடத்தினையும் , நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.48.35-லட்சம் மதிப்பீட்டில் கால்நடை மருத்துவ கட்டிடத்தினையும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர், கீதாஜீவன் அவர்கள் திறந்து வைத்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் அவர்கள் தலைமை வகித்தார்கள். மேலும் நிகழ்வில் கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், ஸ்ரீனிவாசன் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன்
பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன் ராஜ் எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளர் இமானுவேல் ஒன்றிய குழு உறுப்பினர் கவிதா ஊராட்சி மன்ற தலைவர் தண்டாயுதபாணி விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் அருள்ராஜ் மாவட்ட பிரதிநிதிகள் புதுராஜா, ஆதிசங்கர் ஒன்றிய துணைச் செயலாளர் காளிதாஸ்பாண்டியன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறியாளர் அணி
துணை அமைப்பாளர்கள் ரஞ்சித்,சென்றாய பெருமாள் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் டேவிட்ராஜ் தொழிலதிபர் சங்கர்ராம் வழக்கறிஞர் மகேஷ் கிளைச் செயலாளர் சங்கரப்பன் விளாத்திகுளம் பேரூராட்சி வார்டு உறுப்பினர் வேல்ஈஸ்வரி அன்பில் நாராயணமூர்த்தி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட தலைமை நிருபர்,
-முனியசாமி.