கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் நந்தகுமார் (29). இவர் தனது நண்பர் சபரியுடன்(22) கோவை ஆத்துப்பாலம் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். பைக்கை சபரி ஓட்ட நந்தகுமார் பின்னால் அமர்ந்திருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரியின் ஸ்டெப்னி டயர் கழண்டு சாலையில் ஓடியது. அதன் மீது எதிர்பாராத விதமாக சபரி ஓட்டி சென்ற பைக் மோதியது.https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதில் நந்தகுமார் தூக்கி வீசப்பட்டு உடலில் பலத்த காயம் அடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
சி.ராஜேந்திரன்.