தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் புதியம்புத்தூர் கிராமத்தில் ஜான் த பேப்டிஸ்ட் மேல்நிலைப் பள்ளியில் 2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இந்த பயிற்சி வகுப்பு மற்றும் மாதிரி வாக்குப்பதிவினை தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் திரு எல். மதுபாலன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார்கள். மேலும் பயிற்சி வகுப்பினை தனி வட்டாட்சியர் செல்வகுமார் அவர்கள் வழி நடத்தினார். அனைத்து ஏற்பாடுகளையும் வருவாய் வட்டாட்சியர் ஓட்டப்பிடாரம் அவர்கள் செய்தார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,
-முனியசாமி.