கோவை மாவட்டம் வால்பாறை திமுக நகர மன்ற தலைவர் திருமதி அழகு சுந்தரவள்ளி செல்வம் மற்றும் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் செல்வம் ஆகியோர் மீது திமுக தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுத்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இந்நிலையில் திமுக தலைமைக்கு தங்களின் செயலுக்கு வருத்தம் தெரிவித்து மீண்டும் களப்பணி ஆற்றிட வாய்ப்பு நல்கிட வேண்டும் என திமுக தலைமைக்கு கோரிக்கை வைத்தனர்.
கோரிக்கையை ஏற்று திமுக கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அவர்களை மீண்டும் கழக உறுப்பினராக செயல்பட பரிந்துரை செய்தார். தலைமையின் அறிவிப்பு இருவருக்கும் மன மகிழ்ச்சியே ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதுகுறித்து வால்பாறை நகர மன்ற தலைவர் திருமதி அழகு சுந்தரவல்லி செல்வம் கூறுகையில் மாண்புமிகு தமிழக முதல்வருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருக்கும் பொதுச் செயலாளருக்கும் பரிந்துரை செய்த மாவட்ட அமைச்சருக்கும் மாவட்டச் செயலாளருக்கும் நகரச் செயலாளருக்கும் நகர நிர்வாகிகளுக்கும் மேலும் அனைத்து உறுப்பினர்களுக்கும் கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க திராவிடம் மாடல் அரசின் சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நேரம் காலம் பார்க்காமல் மக்களிடம் கொண்டு செல்லவும் மக்களுக்கு பணியாற்றிடவும் தலைவரின் எண்ணம் போல் சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் தமிழக அரசுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் என்றும் உறுதுணையாக இருப்பேன் என்று கூறினார்.
குறிப்பாக வால்பாறை பகுதி அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பேன் என்று கூறிய வார்த்தைக்கு அனைத்து தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன மேலும் தலைமையின் அறிவிப்பால் மீண்டும் பணியாற்றிட வருகை தந்துள்ள இருவரையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த நிர்வாகிகளும் தொண்டர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்
வால்பாறை,
-P.பரமசிவம்.