கோவையில் பாதுகாப்பை தீவிரப்படுத்த கேரள மாநில மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனைக் கூட்டம்.!!

கோயம்புத்தூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட சோதனை சாவடிகளில் வாகன தணிக்கை மற்றும் பாதுகாப்பு பணியினை தீவிரப்படுத்துதல் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வன அலுவலர்கள், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலர்கள் ஆகியோருடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் / மாவட்ட ஆட்சித்தலைவர்கள் கிராந்திகுமார் பாடி (கோயம்புத்தூர்) சித்ரா (பாலக்காடு). கிருஷ்ணன் தேஜா (திருச்சூர்), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன், மாவட்ட வருவாய் ஷர்மிளா, மாவட்ட வன அலுவலர் அலுவலர்கள் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கேரளா மற்றும் தமிழ்நாடு மாநில எல்லைகளாக கோவை மாவட்டத்திலுள்ள ஆனைக்கட்டி, மாங்கரை, முள்ளி, கோப்பனாரி, நடுபுணி, வடக்கு காடு ஜமீன்காளியபுரம், கோபாலபுரம், வீரப்பகவுண்டனூர், வாளையார், வேலந்தபாளையம், மீனாட்சிபுரம், செம்மனபதி, மழுக்குப்பாறை, ஆகிய சோதனை சாவடிகளும், மாவட்ட எல்லைகளில் உள்ள எஸ்.அப்ரல்ஸ், காங்கேயம்பாளையம், செல்லப்பன்பாளையம், ஓடாந்துறை, அந்தியூர், ஏ.நாகூர், ஆகிய சோதனை சாவடிகளில் வரும் வாகனங்களை, வாகன தணிக்கை மேற்கொண்டு, பணம்,
மதுபானங்கள், போதை பொருட்கள், பரிசு பொருட்கள் உள்ளிட்டவைகள் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணிக்கவேண்டும்.

கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காடு, திருச்சூர், எர்ணகுளம், இடுக்கி ஆகிய மாவட்ட எல்லைக்குட்பட்ட சோதனைச் சாவடிகள் வாகன தணிக்கை மற்றும் பாதுகாப்பு பணிகளை மேம்படுத்துல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மேலும், இக்கூட்டத்தில் சோதனைச் சாவடிகளில் வாகன தணிக்கைகளை
தீவிரப்படுத்தவும், பதட்டமான சோதனைச் சாவடிகளை கண்டறிதல்,
பதட்டமான இடங்களில் கூடுதல் தற்காலிமாக சோதனைச்சாவடிகள் அமைத்தல், Dry Day தினங்களில் மதுவிற்பனை செய்யாமல் இருக்க தொடர் கண்காணிப்பு மேற்கொள்வது
மதுபானங்களை கண்காணிப்பதற்கான குழு அமைத்தல், வெளிநாட்டு மது வகைகள் மாநிலங்களுக் கிடையேயான நடமாட்டத்தை கண்காணித்தல், வாகன சோதனை மற்றும் கண்காணிப்பை மேம்படுத்துதல், உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp