இந்நிலையில் இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சருக்கும்,செயலாளருக்கும் வால்பாறை CPI-M கட்சியின் சார்பில் செயலாளர் P.பரமசிவம் கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார். மனுவில் கோவை மாவட்டம், வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல கோடி ரூபாய் செலவு செய்து சில வருடங்களுக்கு முன்பு தமிழக அளவில் அதிகம் பிரசவம் பார்த்து சாதனை புரிந்தது. ஆனால் இன்று மருத்துவர், செவிலியர் மற்றும் இதர பணியாளர்கள் இல்லாமல் வெறும் கட்டிடம் மட்டுமே காட்சியளிக்கிறது.
இம்மருத்துவமனை அருகில் காந்திசிலை பேருந்து நிலையம், அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் மக்கள் குடியிருப்பு போன்ற பலதரப்பட்ட மக்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பயன்பெற்றனர். பிரசவம் பார்ப்பதற்கு பெண் மருத்துவர் கிடையாது. இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் புகார் மனு கொடுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. தமிழகம் முழுவதும் மருத்துவத்துறையில் சிறப்பாக செயல்பட்டு திராவிட மாடல் அரசு சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்துக் கொண்டிருக்கிறது.
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர், செவிலியர் மற்றும் இதர பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் பிரசவம் பார்ப்பதற்கு பெண் மருத்துவரை நியமிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இப்பகுதியில் குறைந்த சம்பளத்தில் வேலை செய்யும் தேயிலைத்தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களும் மாற்றுத் தொழில் இல்லாமல் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர் என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்தியாளர் தமிழகத் துணைத் தலைமை நிருபர்,
-M.சுரேஷ்குமார்.