விடுதி கட்டணத்தின் மீது 18 % ஜி.எஸ்.டி., வரி விளக்கு உள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வணிகத்திலும், கல்வியிலும் வேகமான வளர்ச்சியை எட்டி வரும் இந்தியாவில், மகளிருக்கான முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது. நாட்டின் வளர்ச்சியில் மகளிரின் பங்கு மிக முக்கியமானதாக உள்ளது. பெண்களின் கற்றலும், பணி ஆற்றலும் மேம்பட்டு வருகிறது. இந்நிலையில், மாதந்தோறும் 12 ஆயிரம் ரூபாயிலிருந்து 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறும் பெண்கள், பலர் விடுதிகளில் தங்கி பணியாற்றுகின்றனர். இவர்கள் மாதந்தோறும் சுமார் 6,000 ரூபாய் விடுதி கட்டணத்திற்கு செலவிடுவதாக கூறப்படுகிறது.
சமீபகாலமாக தமிழ்நாடு ஜி.எஸ்.டி., துறையானது, அனைத்து விருந்தினர் விடுதி, விடுதி உரிமையாளர்கள், தங்களது கட்டணத்திற்கு 18% ஜி.எஸ்.டி., வசூலித்து கட்டுமாறு ஆணையிட்டு இருந்தனர்.
அந்நிலையில் கோவை விடுதி உரிமையாளர்கள் சங்கம், இது குறித்து ஜி.எஸ்.டி., அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு பெற்றது. தங்குமிட சேவைக்கு, 2017, ஜூன் 28 அன்று வெளியான மத்திய வரி கட்டண அறிக்கையின் நுழைவு எண்கள், 12, மற்றும் 14 அறிவிப்பின்படி, விதிவிலக்கு அளிக்க தகுதி உள்ளது என வாதிட்டார்கள். ஆனால், அதிகாரிகள், விடுதிகள், ஒட்டுமொத்த வர்த்தக செயல்பாட்டின் கீழ் உள்ளது. இட வசதி, உணவு மற்றும் பிற வசதிகள் அனைத்தும், ஓட்டல்களுக்கு உள்ளது போன்றே வரிவிகிதத்தில் வரும் என தெரிவித்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதனை தொடர்ந்து கோவை விடுதி உரிமையாளர்கள் சங்கத்தினர், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், விடுதி கட்டணங்களுக்கு ஜி.எஸ்.டி ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. ஏழ்மை நிலையில் இருப்பவர்களின் விடுதி கட்டணத்தின் மீதான 18 சதவீத வரி அவர்களை மேலும் பலவீனப்படுத்தும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
-சீனி, போத்தனூர்.