சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள சிவபுரிப்பட்டி கிராமத்தில்
சில தினங்களுக்கு முன்பு பாரிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது.
காவல்துறை அனுமதி தராத இந்த நிகழ்ச்சியின் போது,
முன் விரோதம் கொண்ட இருதரப்பினர் மோதிக்கொண்டனர்.
இருதரப்பிலும் சிங்கம்புணரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், இருதரப்பிலும் 17 பேர் மீது வழக்கு பதியப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
முதல் தகவல் அறிக்கை பதிந்து ஒரு வாரம் கடந்த நிலையில் தற்போது வரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்படாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது. காவல்துறை அனுமதி தராத ஒரு நிகழ்வில், ஊர் பொதுமக்கள் முன்னிலையில் நிகழ்ந்த மோதலில் பலர் காயமுற்ற நிலையிலும், காவல்துறை தரப்பில் நடவடிக்கை எடுக்க மிகுந்த தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. காவல்துறையின் இந்த மெத்தனப்போக்கு,
ஊர் பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.மேலும், இதுகுறித்து காவல்துறை உயரதிகாரிகளின் அலட்சியப் போக்கும் பொதுமக்களுடைய பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
சிவகங்கை மாவட்ட தலைமை நிருபர்,
– பாரூக்.